சிதம்பரம் தில்லைக்காளியம்மனுக்கு அமாவாசை அர்த்தஜாம பூஜை!
ADDED :3359 days ago
சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக்காளியம்மனுக்கு ஆவணி அமாவாசையையொட்டி அர்த்தஜாம சிறப்பு பூஜைகள் நேற்று இரவு நடந்தது. பிரசித்திப் பெற்ற சிதம்பரம் தில்லைக்காளி அம்மன் கோவிலில் அமாவாசை அர்த்தஜாம அபிேஷக மண்டலி சார்பில் ஆவணி மாத அமாவாசையையொட்டி 184வது சிறப்பு அர்த்தஜாமம் பூஜை, மகா அபிேஷகம் நேற்று இரவு நடந்தது. இதனையொட்டி விநாயகர் மற்றும் பிரம்மசாமுண்டி அம்மனுக்கு நெய் தீபம் வழிப்பாடு நடந்தது. இதனைதொடர்ந்து தில்லைக்காளி அம்மனுக்கு குடம் நல்லெண்ணெய் அபிேஷகம், தைலக் காப்பு நடந்தது. இதனைதொடர்ந்து பால், தயிர், மற்றும் குளிர்ச்சியான பொருள்கள், வாசனை திரவியங்கள் போன்ற ஏராளமான பொருள்களால் மகா அபிேஷகம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் வழிப்பட்டு தரிசனம் செய்தனர்.