திருப்பரங்குன்றம் கோயிலில் 8 நாட்கள் மட்டுமே நவராத்திரி கொலு!
ADDED :5121 days ago
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 8 நாட்கள் மட்டுமே நவராத்திரி கொலு அலங்காரம் நடக்கிறது. கோயிலில் நவராத்திரிக்கு 9 நாட்கள் கொலு அலங்காரமும், 10ம் நாள் அம்பு எய்தல் நிகழ்ச்சியும் நடப்பது வழக்கம். "இந்த ஆண்டு அமாவாசை திதியால் எட்டு நாட்கள் கொலு அலங்காரமும் 9ம்நாள் அம்பு எய்தலும் நடக்கிறது என சிவாச்சார்யார்கள் தெரிவித்தனர். கொலு அலங்காரங்கள்: இன்று ராஜராஜேஸ்வரி, செப். 29ல் திருக்கல்யாணம், செப். 30ல் ஊஞ்சல், அக். 1ல் மாணிக்கம் விற்ற லீலை, அக். 2ல் தபசு, அக். 3ல் பட்டாபிஷேகம், அக். 4ல் மகிஷாசுரவர்த்தினி, அக். 5ல் சிவபூஜை அலங்காரங்களில் கோவர்த்தினாம்பிகை அம்பாள் அருள்பாலிப்பார். அக். 6ல் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தங்க குதிரை வாகனத்தில் பசுமலையில் எழுந்தருளி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கிறது.