பெரியானைக் கணபதிக்கு சிறப்பு வழிபாடு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் வீரட்-டா-னேஸ்-வ-ரர் கோ-வி-லில் பெரி-யா-னைக் கண-ப-திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகரை அவ்வையார் வணங்கி கொண்டிருந்தபோ-து சுந்தரரும், சேரமான் பெருமானும் முக்தி பெறுவதற்காக வேகமாக கைலாயம் சென்று கொண்டிருந்தனர். இதனை கண்ட அவ்வையார் சீதக்களப செந்தாமரைப் பூம் என இங்குள்ள விநாயகரை வேகமாக பூஜை செய்தார். விநாயகர் தனது துதிக்கையால் சுந்தரர், சேரமான் பெருமானுக்கு முன்னதாக கைலாயம் கொண்டு சேர்த்தார். இத்தகைய சிறப்புமிக்க அவ்வை அகவல் பாடிய, பெரி-யா-னைக் கண-ப-திக்-கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவசத்தில் அலங்காரம், சோடசோபச்சார தீபாராதனை நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இதேபோல், திருக்கோவிலுார் ஏரிக்கரை மூலையில் உள்ள இரட்டை விநாயகர், என்.ஜி.ஜி.ஓ., நகர் சக்தி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏற்பாடுகளை தொழிலதிபர்கள் சக்தி, தியாகராஜன், செல்வராஜ்‚ சாந்திபால் செய்திருந்தனர்.