உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமிர்த கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி வீதியுலா

அமிர்த கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி வீதியுலா

விழுப்புரம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, அமிர்த கணபதி உற்சவர் வீதியுலா நடந்தது. விழுப்புரம் நகராட்சி, குழந்தைவேல் நகர் பகுதியில் உள்ள அமிர்த கணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. விழாவையொட்டி சுவாமிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில், முக்கிய வீதிகள் வழியாக உற்சவர் வீதியுலா நடந்தது. மாலை சந்தனக்காப்பு அலங்காரம், இரவு ௧௦௮ கணபதி ஹோமம் நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் சுப்ரமணியன், தர்மகர்த்தா தயாளன், நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !