விபூதி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பு
ADDED :3431 days ago
விழுப்புரம்: விழுப்புரம் ரயிலடி ராஜ கணபதி விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழுப்புரம் ரயிலடி ராஜ கணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தியொட்டி, காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமம், 7.00 மணிக்கு மகா அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6.00 மணிக்கு விபூதி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.