வெற்றி விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :3354 days ago
சீரகாபாடி: சேலம், சீரகாபாடி அருகேயுள்ள குட்டக்காடு, தோட்டக்காரன் காட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெற்றி விநாயகர், சின்ன மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. வீரபாண்டி கிராமம், குட்டக்காடு தோட்டக்காரன் காடு பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து புதிதாக வெற்றி விநாயகர் கோவில் கட்டியுள்ளனர். கோவிலில் விநாயகரை தவிர சின்ன மாரியம்மன், மதுரை வீரன், பொம்மியம்மாள் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. நாளை அதிகாலை, 4.30 மணியில் இருந்து, 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் கும்பாபிஷேகம் நடக்கிறது.