உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் 58வது பிரம்மோற்சவ விழா, விக்னேஷ்வர பூஜையுடன் நேற்று துவங்கியது. நேற்று காலை 6:45 மணிக்கு கொடியேற்றம், இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று 8ம் தேதி காலை சிம்ம வாகனத்திலும் மாலை வெள்ளி மயில் வாகனத்திலும், 9ம் தேதி சூரிய பிரபை மற்றும் வெள்ளி அதிகார நந்தியிலும் வீதியுலா நடக்கிறது., 11ம் தேதி சித்தி புத்தி- விநாயகர் திருக்கல்யாணம், 15ம் தேதி காலை 8:30 மணிக்கு தேர் திருவிழா, 16ம் தேதி மாலை 6:30 மணிக்கு நர்த்தன கணபதி தேரடி உற்சவம், காலை 8:00 மணிக்கு கடல் தீர்த்தவாரி, ௧7ம் தேதி இரவு 8:00 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்பல் உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து தினந்தோறும் இந்திர விமானம், முத்து விமானம், முத்துப் பல்லக்கு, சுவாமி வீதியுலா, 22ம் தேதி வெள்ளி மயில் வாகனத்தில் பால சுப்ரமணியர் உற்சவம், 23ம் தேதி உஞ்சல் உற்சவம், 24ம் தேதி விடையாற்றி உற்சவம், 29ம் தேதி மதியம் 12:00 மணிக்கு 108 சங்காபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !