உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஆக்சிஜன் அதிகரிப்பு

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஆக்சிஜன் அதிகரிப்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை தண்ணீரை துாய்மைப்படுத்தி ஆக்சிஜனை அதிகப்படுத்தும் பணி நடக்கிறது. சரவணப் பொய்கையில் மீன் குத்தகைக்கு விடப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான மீன்கள் செத்தன. தண்ணீர் நிறம் மாறியது. மீன்கள் அகற்றப்பட்ட பிறகும், தண்ணீர் துர்நாற்றம் வீசியது. தண்ணீர் மாதிரி ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. தண்ணீரை துாய்மைப்படுத்தவும், எஞ்சியுள்ள மீன்களை காப்பாற்றவும் கோயில் நிர்வாகம் சார்பில் மூன்று மோட்டார்கள் மூலம் ‘ஆக்ஸிடேஷன்’ முறையில்  தண்ணீரை வெளியில் எடுத்து மீண்டும் பொய்கைக்குள் செல்லும் ஏற்பாடுகள் நேற்றுமுன்தினம் இரவு முதல் நடந்து வருகிறது. இதன் காரணமாக தண்ணீர் நிறம் மாறி வருகிறது. ‘ஆய்வு முடிவுகள் வந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்’ என கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !