உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொரக்காய்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு

சொரக்காய்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு

ஆர்.கே.பேட்டை:  திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், நேற்று முன்தினம், சுபத்திரை திருக்கல்யாணம் நடந்தது. நாளை, அர்ச்சுனன் தபசும், 11ல் அக்னி பிரவேசமும் நடைபெற உள்ளன. பள்ளிப்பட்டு அடுத்த, சொரக்காய்பேட்டை, திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நடந்து வருகிறது. கடந்த 3ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், 5ம் தேதி பகாசூரன் கும்பம் படைக்கப்பட்டது, தொடர்ந்து தினசரி இரவில், மகாபாரத தெருக்கூத்து நடத்தப்படுகிறது. நாளை, காலை 10:00 மணிக்கு, அர்ச்சுனன் தபசு நடைபெற உள்ளது.  வரும் 11ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை காலை 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு அக்னி பிரவேசமும் நடைபெறும். திருவிழாவை ஒட்டி, திரளான பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர். 12ம் தேதி தர்மராஜா பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !