வெற்றி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
மந்தாரக்குப்பம்: விநாயகர் சதுார்த்தியையொட்டி, மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி, கடந்த 5ம் தேதி கணபதி பூஜையுடன், 13 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. அதில், ஏராளமான சுமங்கலி பெண்கள் குத்து விளக்கேற்றி வழிபட்டனர். அவர்களுக்கு குங்குமம், ஜாக்கெட் துணி, பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று 9ம் தேதி விநாயகருக்கு 1,008 கொழுக்கட்டைகள் வைத்து விசேஷ பூஜை செய்து, மாலை 6:00 மணியளவில் மலர் அலங்காரத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து, ஊர்வலமாக விநாயகர் சிலை எடுத்துச் செல்லப்பட்டு நெய்வேலி பெருமாள் கோவில் குளத்தில் கரைக்கப்படுகிறது. ஏற்பாடுகளை இந்து முன்னணியினர், விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.