உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் காலபூஜை சிறப்பு வழி கட்டணம் உயர்த்த திட்டம்!

பழநியில் காலபூஜை சிறப்பு வழி கட்டணம் உயர்த்த திட்டம்!

பழநி: பழநி, திருஆவினன்குடிகோயில் காலபூஜை சிறப்பு வழி தரிசன கட்டணத்தை, 50 ரூபாயாக உயர்த்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முருகப்பெருமானின் மூன்றாம்படைவீடு என அழைக்கப் படும் திருஆவினன்குடி கோயிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திர விழாக் காலங்கள் மட்டுமின்றி கார்த்திகை, சஷ்டி போன்ற விஷேச தினங்கள், சாதாரண நாட்களிலும் நுாற்றுக் கணக்கான வெளியூர், உள்ளூர் பக்தர்கள் வருகின்றனர். தற்போது காலபூஜை சிறப்புவழி கட்டணமாக, 10 ரூபாய், பால் அபிஷேக கட்டணமாக, 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் கால பூஜையில் பால், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர், தயிர் உள்ளிட்ட அனைத்து வகை அபிஷேக கட்டணம், 50 ரூபாய்; காலபூஜை சிறப்பு வழி கட்டணம், 50 ரூபாய் என உயர்த்த கோயில்நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பக்தர்கள் ஆட்சேபனையை அக்.,5க்குள் தண்டாயுதபாணி சுவாமி கோயில் தலைமை அலுவலகத்திற்கு எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம் என, இணை ஆணையர் ராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !