உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவாக கலாசார கிராமம்

செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவாக கலாசார கிராமம்

பாலக்காடு:செம்பை வைத்தியநாத பாகவதரின் பிறந்தநாளை முன்னிட்டு, பாலக்காட்டில் நடந்த சங்கீத உற்சவம் நேற்று நிறைவு பெற்றது.நேற்றுமுன்தினம், செம்பை பார்த்தசாரதி கோவிலில் விழா துவங்கியது. இறுதி நாளான நேற்று, செம்பை வித்யாபீடத்தின் 31வது ஆண்டு மாநாட்டை துவக்கி வைத்து அமைச்சர் பாலன் பேசுகையில், வைத்தியநாத பாகவதர் பிறந்த கிராமத்தை கலாசார கிராமமாக மாற்ற ஆலோசிக்கப்படுகிறது. கேரளாவில் எல்லா மாவட்டங்களிலும் கலாசார மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.மண்ணுார் ராஜகுமார உண்ணி உட்பட குழுவினரின் கச்சேரி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !