உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கராபுரம் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம்

சங்கராபுரம் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம்

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் விநாயகர்கள் சிலை ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. சங்கராபுரம் நகரில், விநாயகர் சதுர்த்தி  விழாவையொட்டி, 11 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்தனர். கடந்த 7 நாட்களாக விநாயகர் சிலைகளுக்கு, சிறப்பு பூஜை  நடந்தது. சங்கராபுரம் நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த  விநாயகர் சிலைகள், நேற்று காலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.  பின்னர், சங்கராபுரம் ஏரியில் விநாயகர் சிலை கள் விஜர்சனம் செய்யபட்டது. முன்னதாக ஏ.டி.எஸ்.பி., அனுசுயா டெய்சி எர்னஸ்ட்,  டி.எஸ்.பி.,க் கள் கீதா, மதிவாணன், இன்ஸ்பெக்டர்  வினாயகமுர்த்தி ஆகியோர் மேற்பார்வையில், ஏராளமான  போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டனர். வணிகர்  பேரவை மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன், பிரகாசம், சக்கரவர்த்தி, டிரைவர் சின்னதம்பி, சீனு, அன்ப  ழகன், ஆசிரியர் ராஜா, சிகாமணி, சடையாண்டி உள்ளிட்ட பலர் ஊர்வலத் தில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !