குண்டுக்கரை கோவிலில் அரசு, வேம்பு திருமணம்
ADDED :3383 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில் வளாகம் விநாயகர் சன்னதி அருகே உள்ள அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் நேற்று திருமண விழா நடந்தது. பச்சை பட்டுத்தி வேம்பிற்கு மஞ்சள் கயிற்று தாலி அணிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆராதனை நடந்தது. கோயில் பூசாரி தேவேந்திர குருக்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். நிர்வாக செயலர் மகேந்திரன், சரக அலுவலர் சுவாமிநாதன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.