உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்

முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மணியாரம்பட்டி முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தேனி மாவட்டத்திலேயே முதன்முறையாக இக்கோயிலில் முத்தாலம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல்நாளில் கணபாதி ஹோமம், கல்வி அபிவிருத்தி ஹோமம், ஸ்ரீமகாலட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்யப்பட்டது. கும்ப அலங்காரத்தில் கலசத்தில் நீர் நிரப்பும் நிகழ்வும், யாக வேள்விகள் வேத பாராயணம், திருமுறை பாராயணம், பூர்ணகுதி நிகழ்ச்சிகள் நடந்தது. இரவில் முத்தாலம்மனுக்கு யந்திர ஸ்தாபனமும், சாமி பிரதிட்சையும், மருந்து சாத்துதல், கண் திறப்பு விழாவும் நடந்தது. இரண்டாம் நாளில் பெண்கள் முளைப்பாரியுடன் பொதுமக்கள் பால்குடம் எடுத்து கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் போஜராஜ், செயலாளர் சேகர், பொருளாளர் பாண்டியன் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !