பாலசுப்ரமணியர் கோவிலில் கஜலட்சுமி திருவிளக்கு பூஜை
ADDED :3318 days ago
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடியில் உள்ள, பாலசுப்ரமணியர் கோவிலில், திருவிளக்கு பூஜையொட்டி, நேற்று காலை, 11:00 மணிக்கு, கணபதி ஹோமம் நடந்தது. பின், பாலசுப்பிரமணியருக்கு, சிறப்பு அபி?ஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதையடுத்து, மாலை, 7:00 மணிக்கு மேல், ஊர்மக்கள் சுபிட்சம் பெறவும், செல்வ, செழிப்போடு விளங்கவும், கஜலட்சுமி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியார் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.