உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணகிரி நாதர் திருப்புகழ் மன்றத்தின் ஆண்டு விழா

அருணகிரி நாதர் திருப்புகழ் மன்றத்தின் ஆண்டு விழா

புதுச்சேரி: புதுச்சேரி அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றத்தின் 20வது ஆண்டு விழா தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்தது.

சொற்பொழிவு: அருணகிரிநாதர் சுவாமிகள் தலைமையில் நடந்த சொற்பொழிவில், அம்பலத்தாடும் சுவாமிகள் திருமடம் 33வது பட்டம் கனகசபை சுவாமிகள் கலந்து கொண்டு பேசினார். சிந்தனை அரங்கம், அருணகிரிநாதரும் வள்ளல் பெருமானும் என்ற தலைப்பில் அர்த்தநாரியும், வாக்கிற்கு அருணகிரியும்-வண்ணச்சரபமும் என்ற தலைப்பில் காரைக்குடி தமிழ் கல்லுாரி முன்னாள் முதல்வர் முருகசாமி பேசினர்.

மகளிர் அரங்கம்: திருப்புகழில் பெண்மையும்- பேணும் தன்மையும் என்ற தலைப்பில் நடந்த மகளிர் அரங்கிற்கு, புதுச்சேரி பல்கலைக்கழக தமிழ்த் துறை பேராசிரியர் இளமதி ஜானகிராமன் தலைமை தாங்கினார். திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறையின் ஓய்வு பெற்ற இயக்குனர் சுமதி, ரங்கநாயகி வளவன், லாவண்யா ஆகியோர் பேசினர்.

இசை அரங்கம்: விலங்கல்பட்டு வைதியநாத சுவாமிகள் தலைமையிலும், சிங்காரவேல் முன்னிலையிலும் சங்கீத சலங்கை நாட்டியாலயா ராஜமாணிக்கம், விஷூ, கோனேரி ராமசாமியின் இசை அரங்கம் நடந்தது.

நுால் வெளியீடு: மன்ற தலைவர் நாராயணசாமி தொகுத்த கந்தர் அலங்காரம், தென் ஆப்பிரிக்காவும் முருகபத்தி மாநாடும், கந்தர் சஷ்டி நுால்களை, மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் வெளியிட்டு அருளாசி வழங்கினர்.

ஆய்வரங்கம்: திருப்புகழ் காட்டும் ஆளும் தன்மையும்-ஆண்மையும், திருப்புகழ் ஒரு தகவல் களஞ்சியம் என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடந்தது. மன்ற புரவலர் ரத்தின ஜனார்த்தன் தலைமை தாங்கினார். தலைவர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். மன்ற நிறுவனர் சேது முருகபூபதி, இளங்கோ, சீனு வேணுகோபால், ராமசாமி, கோவிந்தராசு, ரேவதி, அருட்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். மன்ற இணைச் செயலாளர் ராமதாஸ் காந்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !