திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த உற்சவம்
ADDED :3505 days ago
ஆர்.கே.பேட்டை: திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, நேற்று நடந்தது. இதில், காப்பு கட்டி விரதமிருந்த திரளான பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பள்ளிப்பட்டு அடுத்த சொரக்காய்பேட்டை, திரவுபதியம்மன் கோவிலில், கடந்த 2ம் தேதி, கொடியேற்றத்துடன் அக்னி வசந்த திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை, அர்ச்சுனன் தபசு நடந்தது. நேற்று காலை, துரியோதனன் படுகளம், நடத்தப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் மூட்டப்பட்ட அக்னி குண்டத்தில், திரளான பக்தர்கள் இறங்கி தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இன்று, தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.