செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா
செஞ்சி: செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் 9ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு சேடஷ தசாச்சர்ய மகா மேரு ஸ்ரீசக்ர யாகம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள செல்லபிராட்டியில் உள்ள லலதா செல்வாம்பிகை கோவிலில் 9வது ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 10ம் தேதி காலை 9 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் கோவிலை சுற்றி அஷ்ட திக்கில் அமர்ந்துள்ள கிராம தேவதைகளுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தது.
11ம் தேதி லலிதா சகஸ்ரநாம ஹோமம் நடந்தது. இன்று(செப் 12ல்) காலை 7 மணிக்கு லலிதா செல்வாம்பிகைக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்தனர். 9 மணிக்கு லலிதா செல்வாம்பிகை உள்ளிட்ட 16 தேவதைகளுக்கும் உண்டனா புஷ்பம், வஸ்திரம், திரவியங்களை கொண்டு சேடஷ தசாச்சர்ய மகா மேரு ஸ்ரீசக்ர யாகம் நடந்தது. பகல் 2 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து அம்மனுக்கு கலசாபிஷேகம், மகா புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதானையும் நடந்தது. பக்தர்களுக்கு மூன்று நாட்களும் அன்னதானம் நடந்தது. பூஜைகளை சேந்தமங்கலம் கணேச சிவாச்சாரியார், ஈஸ்வர சிவம் உள்ளிட்ட குழுவினர் செய்தனர். அறங்காவலர் கன்னியப்பன், அறிவழகன் ஸ்தபதி, விழா குழுவினர் மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.