உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பவித்ர உற்சவம் துவக்கம்: 19ந் தேதி கருடசேவை!

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பவித்ர உற்சவம் துவக்கம்: 19ந் தேதி கருடசேவை!

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசயனர் சன்னிதியில் இன்று முதல் திருபவித்ர உற்சவம் துவங்கி ஏழு நாட்கள் நடக்கும் விழாவை தொடர்ந்து, 19ந்தேதி கருடசேவை நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை 4 மணிக்கு வேதபிரான் பட்டர் அனந்தராமகிருஷ்ணன் திருமாளிகையிலிருந்து மஞ்சள்நுால் மாலைகள் வடபத்ரசயனர் சன்னிதிக்கு கொண்டு வரபட்டு, ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுக்கு அணிவிக்கபட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. தொடர்ந்து தினமும் மாலை 4 மணிக்குமேல் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் எழுந்தருளி, நவகலச பூஜை செய்யப்படுகிறது. 19ந்தேதி கருடசேவையும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா மற்றும் கோயில் அலுவலர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !