உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆழ்வார்குறிச்சி கோயிலில் நவராத்திரி கொலு

ஆழ்வார்குறிச்சி கோயிலில் நவராத்திரி கொலு

ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சி நடுத்தெரு முப்புடாதி அம்மன் கோயிலில் முதன்முதலாக திருவிளக்கு பூஜை கமிட்டியினர் நவராத்திரி கொலு அமைத்துள்ளனர். ஆழ்வார்குறிச்சி போஸ்ட் ஆபீஸ் எதிரேயுள்ள நடுத்தெரு முப்புடாதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். இங்கு முதன்முறையாக திருவிளக்கு பூஜை கமிட்டியினர் கொலு அமைத்துள்ளனர். தினமும் வழிபாடு நடந்து வருகிறது. இதேபோல் ஆழ்வார்குறிச்சி முப்புடாதி அம்மன் கோயில்கள், கடையம் கைலாசநாதர்-பஞ்சகல்யாணி அம்பாள் கோயில், ஆழ்வார்குறிச்சி அங்காள பரமேஸ்வரி கோயில், கடையம் முப்புடாதியம்மன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் கொலு வைபவம் வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !