உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவிலில் வாமன ஜெயந்தி விழா கோலாகலம்!

உலகளந்த பெருமாள் கோவிலில் வாமன ஜெயந்தி விழா கோலாகலம்!

திருக்கோவிலுார்: உலகளந்த பெருமாள் கோவிலில், திருவோணத்தை முன்னிட்டு, வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் வாமனர்  அருள்பாலித்தார். திருக்கோவிலுார் பெருமாள் கோவிலில் மூலவரான உலகளந்த பெருமாள் சன்னதிக்கு பின்புறத்தில் வாமனர் சன்னதி  அமைந்துள்ளது. ஆவணி திருவோணத்தை முன்னிட்டு, நேற்று காலை வாமனருக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00  மணிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்தில்,  சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சகஸ்ர தீபம், தீப பிரதிஷ்டை, விஷ்ணு சகஸ்ர  நாமம் ஆகியவை நடந்தன. ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !