உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக 100 மணி நேர நாம ஸங்கீர்த்தனம்!

உலக நன்மைக்காக 100 மணி நேர நாம ஸங்கீர்த்தனம்!

குரோம்பேட்டை: உலக மக்களின் நன்மைக்காக, தொடர்ந்து, 100 மணி நேரம், அகண்ட மஹா மந்த்ர நாம ஸங்கீர்த்தனம் செய்யும் நிகழ்ச்சி, குரோம்பேட்டையில் நேற்று துவங்கியது. ஸ்ரீகிருஷ்ண சைதன்ய சுவாமிகள் நினைவாகவும், உலக மக்களின் நன்மைக்காகவும், தொடர்ந்து, 100 மணி நேரம் அகண்ட மஹா மந்த்ர நாம ஸங்கீர்த்தனம் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று துவங்கியது. குரோம்பேட்டை, ராஜராஜேஸ்வரி தெருவில் உள்ள, ஏர்.ஆர்.வி., மஹாலில் நேற்று மாலை, 4:01 மணிக்கு வேத கோஷத்துடன் நடந்து வரும் இந்நிகழ்ச்சியை, யக்ஞயராம சர்மா துவக்கி வைத்தார். கடையநல்லுார் ப்ரும்மஸ்ரீ கே.எஸ்.ராஜகோபால் தாஸ் பாகவதர், அகண்ட மஹா மந்த்ர நாம ஸங்கீர்த்தனம் நிகழ்ச்சியை, பக்தர்களுடன் பாடுகிறார். இந்நிகழ்ச்சி, நேற்று முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் இடைவிடாமல், 100 மணி நேரம் நடத்தப்படுகிறது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடைசி நாளான, வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு, 8:01 மணிக்கு, நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !