உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயில் வருஷாபிஷேகம்

பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயில் வருஷாபிஷேகம்

பெரியகுளம்: பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேகம், தியான மண்டப கிரகப்பிரவேஷத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் தெற்குரதவீதி டாக்டர் தங்கவேல் நகரில் ஷீரடி சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. நேற்று இதன் வருஷாபிஷேகம் மற்றும் துவாரக மாயி குறைதீர்க்கும் சாவடி (தியான மண்டபம்) கிரகப்பிரவேஷம் நடந்தது. கிரகப்பிரவேஷம், மஹா சாந்தி ஹோமங்கள், பூர்ணஹூதி, ஆரத்தி, மஹா அபிஷேகம், அலங்கார தீபாராதனை உள்ளிட்டவற்றை அர்ச்சகர் ராமநாதன் செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் வர்த்தகபிரமுகர் முத்துமகேஸ்வரன், டாக்டர் முத்துவிஜயன் மற்றும் சாய்பக்தர்கள் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !