கொளத்தூரில் கும்பாபிஷேகம்
ADDED :3313 days ago
மரக்காணம்: மரக்காணம் அடுத்த கொளத்துார் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை யாக சாலை பூஜைகள் நடந்தது. காலை 10.00 மணிக்கு முத்துமாரியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து 10:30 மணிக்கு, மூலவர் முத்துமாரியம்மனை, பிரதிஷ்டை செய்தனர். இரவு அம்மன், மலர் அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.