தேய்பிறை பஞ்சமி; சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன்
ADDED :4 hours ago
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே தேய்பிறை பஞ்சமி திதியொட்டி நவசக்தி வாராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் செல்லும் வழியில், வாராஹி மந்திராலயம் உள்ளது. இங்குள்ள நவசக்தி வாராஹி அம்மன், கார்த்திகை மாதத்தின் தேய்பிறை பஞ்சமி திதியையொட்டி, சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.