உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூலோக சொர்க்கத்தில் பிரம்மாண்டமாய் ஒரு பிரம்மோற்சவம்!

பூலோக சொர்க்கத்தில் பிரம்மாண்டமாய் ஒரு பிரம்மோற்சவம்!

பூலோக சொர்க்கம் என்றைழைக்கப்படும் திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் 9 நாள் பிரம்மோற்சவ விழாவின் போது உற்சவரான மலையப்பசுவாமி விதம்,விதமான அலங்காரத்தில் மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மூலவருக்கு மட்டுமே போடக்கூடிய ஆயிரம் பொன்காசு மாலை.பச்சை மரகதம் பதித்த கழுத்தணி, மற்றும் வைரகீரீடம் என்று விலைமதிக்கமுடியாத பழமையும்,பெருமையும் வாய்ந்த நகைகளை அணிந்து இந்நாட்களில் வலம்வரும் சீனிவசாப்பெருமாளை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இந்நாட்களில் ஆன்மீகம் தொடர்பான கலை நிகழ்ச்சிகளும்,மாடவீதிகளில் சுவாமி உலாவரும்போது பல்வேறு மாநில கலாச்சார நடனங்களும் இடம் பெறும் என்பதால் மாடவீதிகளில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மலை அடிவாரமான அலிபிரி முதல் பெருமாள் வீற்றிருக்கும் ஆனந்த நிலையம் வரை செய்யப்பட்டுள்ள மின்விளக்கு அலங்காரங்கள் வேறு எங்கும் காணமுடியாதது. பிரம்மோற்சவ விழாவினை நிறைய ஆலோசனைகளின் அடிப்படையில் பக்தர்கள் பாராட்டும்படி பலவித ஏற்பாடுகளை செய்துள்ளனர்.அதே நேரம் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பெருமாளின் அலங்காரம் உள்ளீட்ட நிகழ்ச்சிகளை படமெடுக்கமுடியும்.அந்த வகையில் கடந்த 9 ஆண்டுகளை தொடர்ந்து 10வது ஆண்டாக "தினமலர் நாளிதழுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதியின் காரணமாக எடுக்கப்பட்ட படங்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. பிரம்மோற்சவம் முடியும் வரை இந்த படங்கள் தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !