கள்ளக்குறிச் பெருமாள் கோவிலில் புரட்டாசி உற்சவம் கோலாகலம்!
ADDED :3350 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம் சிறப்பாக நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. காலை சுப்ரபாரத சேவை, விஷ்வரூப தரிசனம் ஆகியவற்றிற்கு பின் பெருமாள், தாயார் உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்தனர். சிறப்பு அலங்காரம் செய்து கோவிலுக்குள் வளமாக சென்று, பெருமாள் தாயாரை மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். துளசி அர்ச்சனை, அலங்கார தீப வழிபாடு, மந்திர உபச்சார பூஜைகள் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை தேசிகபட்டர் செய்து வைத்தார்.