திருவண்ணாமலை சென்ற சிவனடியார்களுக்கு வரவேற்பு!
ADDED :3311 days ago
செஞ்சி: செஞ்சி வழியாக திருவண்ணாமலை சென்ற சிவனடியார்களுக்கு பக்தர்கள் சார்பில் வரவேற்பளித்தனர். திண்டிவனம் அப்பர் சாமி உழவார பணிக்குழுவினர் 10வது ஆண்டாக திருவண்ணாமலைக்கு பாதயாத்திரை சென்றனர். இக்குழுவை சேர்ந்த 225 பேர் கடந்த 7 ம் தேதி மாலை அணிந்தனர். காலை 4 மணிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் தட்சணாமூர்த்தி தலைமையில் திண்டிவனத்தில் இருந்து புறப்பட்டனர். பகல் 12 மணிக்கு செஞ்சிக்கு வந்தவர்களை செஞ்சி நகர பக்தர்கள் சார்பில் வணிகர் சங்க தலைவர் ராஜேந்திரன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவசுப்பிரணி ஆகியோர் வரவேற்று தமிழ்திருமகள் திருமண மண்டபத்தில் உணவளித்தனர். மாலை 3 மணிக்கு மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.