திருவதிகை கோவிலில் நாராயணசாமி தரிசனம்
ADDED :3364 days ago
பண்ருட்டி: புதுச்சேரியில் தொழிற்சாலைகள் துவங்க வசதியாக மின்சாரம், வரி சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது என, முதல்வர் நாராயணசாமி கூறினார். கடலுார் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில், 100 நாள் ஆட்சியில் அரசின் திட்டங்கள் பொது மக்களை சென்றடைகிறது. புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் துவங்க வசதியாக மின்சாரம், வரி சலுகைகள் அளிக்கப்படுகிறது. காவிரியில் எந்தெந்த காலத்தில் எவ்வளவு தண்ணீர் விடவேண்டும் என தெளிவாக உத்தரவு உள்ளது. இதில், கர்நாடக அரசு நடந்து கொண்ட விதம் வருத்தமளிக்கிறது; கண்டனத்திற்கு உரியது. அங்குள்ள தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.