பண்ணைக்காடு ஆதிபராதி வழிபாட்டு மன்றம் சார்பாக கஞ்சிகலய ஊர்வலம்
ADDED :3364 days ago
பண்ணைக்காடு: பண்ணைக்காடு ஆதிபராதி வழிபாட்டு மன்றம் சார்பாக கஞ்சி கலயம் ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தனர். முன்னதாக கொடியேற்றுதல், கலச வேள்வி நடந்தது. கஞ்சி வார்ப்பு, பிரசாதம் வழங்கல், சமுதாய பணியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகம், கம்பளம், சுவட்டர் வழங்கப்பட்டது. முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.