உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிலுக்குவார்பட்டி சர்ச் திருவிழா

சிலுக்குவார்பட்டி சர்ச் திருவிழா

நிலக்கோட்டை: சிலுக்குவார்பட்டி ஆரோக்கியமாதா சர்ச் திருவிழாவில் நவநாள் திருப்பலி, மாதா சப்பர பவனி நடந்தது. கடந்த செப். 9ல் மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோனி பாப்புசாமி கொடியேற்றி நவநாள் திருப்பலியை துவக்கி வைத்தார். மதுரை, கம்பம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, கருமாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் சர்ச் பாதிரியார்கள் நவநாட்களில் திருப்பலி நடத்தினர். செபமாலை, தியானம் நடந்தது. சிலுக்குவார்பட்டி பங்கு மக்கள், பள்ளி மாணவர்களால் யேசு காவியம் நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன் தினம் இரவு மின் அலங்கார சப்பரத்தில் ஆரோக்கியமாதா, மைக்கேல் ஆண்டவர், இயேசு, மாதா அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் நடந்தது. நேற்று காலை ஆடம்பரத் திருப்பலியும், தேர்ப்பவனி, நற்கருணை ஆசீர், கொடியிறக்கத்துடன் திருவிழா முடிந்தது. பாதிரியார் பால்ராஜ், ஊர் நாட்டாமை ஆரோக்கியசாமி, ஊர் மணியம் ஆரோக்கியம், அமலவை, தாமஸ் சபை சகோதரிகள், விழாக் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !