உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவித்ர உற்சவம்: திருவள்ளூர் வீரராகவர் வீதி உலா!

பவித்ர உற்சவம்: திருவள்ளூர் வீரராகவர் வீதி உலா!

திருவள்ளூர்: பவித்ர உற்சவத்தின், நான்காவது நாளான நேற்று, திருவள்ளூர் வீரராகவ பெருமாள், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், பவித்ர உற்சவம் நடந்து வருகிறது. ஏழு நாள் நடைபெறும் இந்த உற்சவத்தின், நான்காவது நாளான நேற்று காலை மற்றும் மாலையில் ஹோமம் நடைபெற்றது. மேலும், மாலையில், வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஐந்தாவது நாளான இன்று, பவித்ர உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !