சாரம் விஜயகணபதிக்கு திருக்கல்யாண உற்சவம்!
ADDED :3418 days ago
புதுச்சேரி: புதுசாரம் நடுத்தெரு சித்தி புத்தி விஜயகணபதிக்கு, திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. புதுச்சேரி புதுசாரம் நடுத்தெருவில் உள்ள சித்தி புத்தி விஜயகணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தி உற்சவத்தை முன்னிட்டு, சித்தி புத்தி விஜயகணபதிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி, சாரம் அவ்வை திடலில் நேற்று நடந்தது. மாலை 6:00 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து, இரவு 8:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று, 20ம் தேதி காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.