பசுமலைதாங்கல் கோவில் மகா கும்பாபிஷேக விழா
ADDED :3302 days ago
செஞ்சி: செஞ்சி தாலுகா, பசுமலைதாங்கல் பாண்டுரங்க சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பசுமலை தாங்கல் கிராமத்தில் உள்ள ராதா ருக்மணி சமேத பாண்டுரங்க சுவாமி கோவிலின் திருப்பணிகள் முடிந்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோபூஜை, விஸ்வரூப தரிசனமும், 7:00 மணிக்கு மகா ஹோமம், 8:00 மணிக்கு மகா பூர்ணா ஹூதியும் நடந்தது. இதையடுத்து கடம் புறப்பாடும், 8:15 மணிக்கு, மகா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, மூலவர் மகா கும்பாபிஷேகமும், 9:30 மணிக்கு திருக்கல்யாணமும், சுவாமி வீதியுலாவும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.