உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிகாரிகளை நம்பி பயனில்லை கோவிலை சீரமைத்த மக்கள்!

அதிகாரிகளை நம்பி பயனில்லை கோவிலை சீரமைத்த மக்கள்!

உத்திரமேரூர்: சாத்தணஞ்சேரியில், சிதிலமடைந்த பழமையான பச்சையம்மன் கோவில், அப்பகுதிவாசிகள் முயற்சியால் சீரமைப்பு பணி  மேற்கொள்ளப்பட்டு உள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரியில், பாலாற்றங்கரை ஓரத்தில், 500 ஆண்டுகள் பழமையான பச்சையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், ஆற்றங்கரை அம்மன் எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆவணி  மாதம் இந்த கோவிலுக்கு நடக்கும் ஆற்று திருவிழாவில் சுற்றிலும் உள்ள பக்தர்கள் பங்கேற்று, தீ மிதித்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை  செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலின் கருவறை மற்றும்  கோவில் கோபுரம் ஆகியவை பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தன. இதை தொடர் ந்து, பகுதி வாசிகள் கோவிலை சீரமைக்க தீர்மானித்தனர். அதன்படி, சுற்றிலும் உள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்களிடையே நன்கொடை வசூலித்து, கடந்த சில மாதங்களுக்கு  முன் கோவில் சீரமைப்பு பணியை துவங்கி, புதியதாக கோபுரம் அமைத்தல் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !