உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை ராமநாத சுவாமி வீதி உலா

ஊத்துக்கோட்டை ராமநாத சுவாமி வீதி உலா

ஊத்துக்கோட்டை: புரட்டாசி மாதத்தை ஒட்டி, உற்சவர் ராமநாத சுவாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டை அடுத்த, லட்சிவாக்கம் கிராமத்தில் உள்ளது, ராமநாத சுவாமி கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நேற்று, புரட்டாசி மாதம், முதல் சனிக்கிழமையை ஒட்டி, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மாலை, உற்சவர் கிருஷ்ணர், பாமா, ருக்மணியுடன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !