உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உற்சவ மண்டபத்திற்கு ஹவுஸ் அரெஸ்ட் தொல்லியல் துறை கருணை காட்டுமா?

உற்சவ மண்டபத்திற்கு ஹவுஸ் அரெஸ்ட் தொல்லியல் துறை கருணை காட்டுமா?

வாலாஜாபாத்:பாதுகாப்பின்றி சீரழிந்து வரும் தொல்லியல் துறை உற்சவ மண்டபத்தை, சீரமைத்து பாதுகாக்க சம்மந்தப்பட்ட தொல்லியல் துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.காஞ்சிபுரம்- - வாலாஜாபாத் செல்லும் சாலையில், தாங்கி கூட்டு சாலை தொல்லியல் துறைக்கு சொந்தமான உற்சவ மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் அழகிய சிற்ப வேலைபாடுளுடன் உடையது. இந்த மண்டபத்தை சுற்றிலும் தொல்லியல் துறை அதிகாரிகள் கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும், கம்பி வேலியை கடந்த ஆண்டு மர்ம நபர் சிலர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.மேலும், மண்டப வளாகத்தில் வேலி காத்தான் மற்றும் பிற செடிகள் புதர் மண்டி இருப்பதால், சமூக விரோத செயல்களை அரங்கேறும் அபாயம் உள்ளது. எனவே, தொல்லியல் துறைக்கு சொந்தமான உற்சவ மண்டப வளாகத்தை புதர் மண்டி கிடக்கும் செடிகளை அகற்றி, மண்டபத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !