உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொரவி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

தொரவி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

விக்கிரவாண்டி: தொரவி கைலாசநாதர் கோவிலில்,  சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம், தொரவி கிராமத்தில்  உள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 6:00   மணிக்கு,  விநாயகர், தட்சிணாமூர்த்தி, சிவகாமி உடனுறை நடராஜர், நந்தீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை  திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. பின், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து,  சிறப்பு அலங்காரம் செய்து, 21  மூலிகைகளால் சிறப்பு  அர்ச்சனை செய்யப்பட்டது.  இரவு 7:00  மணிக்கு, மகா தீபாராதனை நடந்தது. பூஜைகளை, புதுச்சேரி சிவனடியார்  சரவணன் செய்தார். முன்னதாக, சிவனடியார் புதுச்சேரி லலிதா தலைமையில் பாலசுப்ரமணி, மாலதி, சுமதி, கவி, தமிழ் ஆகியோர்  விநாயகர் அகவல் பாடினர். பூஜை ஏற்பாடுகளை, ஊராட்சி மன்ற தலைவி நாகேஸ்வரி சங்கர், பாலையா, ஞானபிரகாசம் மற்றும்  ஏனாதிநாத  நாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !