கோவில் இடத்தில் அறிவிப்பு அறநிலையத்துறை நடவடிக்கை
திருப்பூர் : பல்லடத்தில், ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம், சர்வே செய்யப்பட்டு, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. பல்லடம், பொன்காளியம்மன் கோவிலுக்கு சொந்தமாக, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே, நகரின் மையப்பகுதியில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 55 சென்ட் நிலம் உள்ளது. இதனை, அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தினர் ஆக்கிரமித்திருந்தனர். கடந்த ஆண்டு, நிலம் மீட்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டன. திடீரென்று, அறிவிப்பு பலகை அகற்றப்பட்டு, மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டது. இது குறித்து ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதனால், செயல் அலுலவர் சிவராமசூரியன் மற்றும் அலுவலர்கள், சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, மீண்டும் அறிவிப்பு பலகை வைத்தனர். அறநிலையத்துறை அதி காரி கூறுகையில், ‘கோவிலுக்கு சொந்தமான, 55 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள் ளது. சர்வே செய்து சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்படும்; ஆயிரம் சதுர அடி நிலத்தில் கட்டடம் உள்ளதால், நோட்டீஸ் வழங்கப்பட்டு, சர்வே செய்து, சட்டப்படி அதுவும் அகற்றப்படும்,’ என்றனர்.