உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பவித்ர உற்சவம் நிறைவு

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பவித்ர உற்சவம் நிறைவு

திருவள்ளூர்:திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், ஏழு நாட்களாக நடைபெற்று வந்த பவித்ர உற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம், கடந்த, 16ம் தேதி துவங்கியது.தினமும் ஹோமம், காலை, 10:00 மணிக்கும், இரவு, 7:00 மணிக்கும் நடைபெற்றது. பெருமாள் மாடவீதி புறப்பாடு, ஏழு நாட்களும் நடந்தது. உற்சவத்தின் கடைசி நாளான நேற்று, உற்சவர் வீரராகவர், மாலை, 5:00 மணிக்கு, நான்கு வீதிகளில் வலம் வந்தார். காலை, 10:00 மணிக்கும், பின் இரவு, 7:00 மணிக்கும் ஹோமம் நடந்தது. மகா பூராணாஹூதி முடிந்த பின், இரவு, 12:00 மணிக்கு பெருமாள் திருமஞ்சனத்துடன் உற்சவம் நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் உற்சவத்தில் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !