கன்னியாகுமரியில் திருப்பதி கோயில் மூலஸ்தான கற்கள் வருகை
ADDED :3339 days ago
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் திருப்பதி கோயில் மூலஸ்தானம் அமைப்பதற்கான கற்கள், திருச்சியில் இருந்து கொண்டு வரப்பட்டன. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில், ஐந்தரை ஏக்கர் நிலத்தில், திருப்பதி கோயில் கட்டும் பணி நடக்கிறது. இங்கு ஏழு மலையான் மூலஸ்தானத்துடன், தனித்தனி சன்னதிகள், கோசாலை, அன்னதான மண்டபம், முடிகாணிக்கை செலுத்தும் இடம், தெப்பக்குளம், அர்ச்சகர்கள் தங்கும் வீடுகள் கட்டப்படுகின்றன. மூலஸ்தானம் அமைப்பதற்கான கற்கள் திருச்சியில் இருந்து நேற்று காலை கொண்டு வரப்பட்டன. 140 டன் எடை கொண்ட இந்த கற்கள் ஏழு லாரிகளில் வந்தன. சிறப்பு பூஜைகளுடன் மூலஸ்தானம் அமைக்கும் பணி தொடங்கியது. தேவஸ்தான துணை செயற்பொறியாளர் சந்திரமோகன் ரெட்டி, உதவி பொறியாளர் அமர்நாத் ரெட்டி மற்றும் சிற்பிகள் கலந்து கொண்டனர்.