உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோனியம்மன் கோவில் வளாகத்தில் ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்

கோவை கோனியம்மன் கோவில் வளாகத்தில் ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்

கோவை: காஷ்மீர் ராணுவ முகாமில், தற்கொலைப்படை தாக்குதலில், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கோவை கோனியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. இந்து மக்கள் கட்சி(தமிழகம்) சார்பில் நடந்த நிகழ்ச்சியில், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம், 20 தீபங்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செ லுத்தப்பட்டது. இந்து மக்கள் கட்சி மாநில ஜோதிடர்அணித்தலைவர் பிரசன்னா தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் ரவி, மாநில மகளிர் அணித்தலைவி நிர்மலா, கெம்பட்டி காலனி தர்மராஜா கோவில் அருள் பீடத்தின் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !