முதல்வர் உடல் நலம் பெற வர்ணீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :3398 days ago
அரூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் பெற வேண்டி, அரூர் வர்ணீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டி, அரூரில் உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், தர்மபுரி ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் தென்னரசு தலைமையில், அ.தி.மு.க.,வினர் சிறப்பு பூஜைகளை செய்தனர்.