ஜெ., உடல் நலம் பெற வேண்டி 1008 குத்துவிளக்கு பூஜை
ADDED :3330 days ago
கரூர் : கரூர் அருகே நெரூர் ஈஸ்வரன் கோயிலில் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி, அதிமுக சார்பில் 1008 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் காளியப்பன், கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய செயலர் கமலக்கண்ணன் உட்பட ஏராளமான அதிகமு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.