உலகின் பெரிய கடனாளி!
ADDED :3487 days ago
தன் கல்யாணத்திற்காக குபேரனிடம் 14 லட்சம் தங்க நாணயங்களைக் கடனாக வாங்கியதால் ஏழுமலையானை பெரிய கடனாளி’ என்று சொல்வர். இதற்கான கடன் பத்திரத்தையும் குபேரனுக்கு எழுதிக் கொடுத்தார். இந்த பத்திரத்தில் பிரம்மா, சிவன், அரச மரத்தின் அபிமான தேவதை ஆகிய மூவரும் சாட்சி கையெழுத்திட்டனர். இந்த கடன் மட்டுமில்லாமல் இன்னொரு கடனும் ஏழுமலையானுக்கு தினமும் ஏறிக் கொண்டேயிருக்கிறது. கோவிந்தா’ என்ற திருநாமத்தை ஒருமுறை சொன்னால் கூட போதும். உடனே அந்த பக்தருக்கு ஏழுமலையான் கடன்பட்டவராகி விடுகிறார். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் திருமலை எங்கும் கோவிந்த நாமம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஏழுமலையான், உலகிலேயே மிகப் பெரிய கடனாளியாக ஆகி கொண்டிருக்கிறார் என்பதை உணரலாம்.