/
கோயில்கள் செய்திகள் / ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி என்கிறார்களே உண்மையா?
ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி என்கிறார்களே உண்மையா?
ADDED :3406 days ago
இரண்டு நபர்கள் ஒரே குற்றத்தை செய்யும் நிலையில், தண்டனையிலிருந்து தப்பித்தவனுக்கு அவனது ராசியில் இருந்து ஒன்பதாம் இடத்தில் குருவும், அகப்பட்டு தண்டனை பெறுபவனுக்கு அஷ்டமத்தில் (ராசியிலிருந்து எட்டாம் இடம்) சனியும் இருப்பதாகச் சொல்வர். பிறந்த ராசிக்கு ஒன்பதில் குரு இருந்தால் தைரியமாக தப்பு செய்யலாம் என்று இங்கே பொருள் கொள்ளத் தேவையில்லை. அப்படி செய்த குற்றத்திற்குரிய பலன், அதற்குரிய கிரகநிலை வரும் போது தண்டனை தந்து விடும் என்பதை மறந்து விடக்கூடாது.