மழை வேண்டி மலைக்கு பக்தர்கள் பாத யாத்திரை
ADDED :3333 days ago
பொங்கலூர்: பொங்கலூர்ங்கலூர் வட்டாரத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எனவே, மழை வேண்டி, கிராமங்களில், மழைச்சோறு எடுத்து, மாரியம்மனை வழிபடும் நிகழ்வு, ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அவ்வகையில், மழை பெய்ய வேண்டி கண்டியன்கோவில் முன்னாள் ஊராட்சி தலைவர் கோபால் தலைமையில், விவசாயிகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர், பொங்கலூர் சின்னாரியபட்டி மாரியம்மன் கோவிலில் வழிபட்டனர். பின், அங்கிருந்து, நடைபயணமாக, காங்கயம் அருகேயுள்ள சிவன்மலைக்கு சென்றனர். அங்கு, சுப்ரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷே, அலங்கார பூஜைகளை நடத்தி, மழை வேண்டி சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.