பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவம்
ADDED :3405 days ago
ஊத்துக்கோட்டை: பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், 10 நாள், நவராத்திரி உற்சவம், வரும், 1ம் தேதி துவங்குகிறது.
ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது பள்ளிகொண்டேஸ்வரர் கோவில். இக்கோவிலில், இந்தாண்டு, வரும், 1ம் தேதி நவராத்திரி விழா துவங்குகிறது. இதையொட்டி, அங்குள்ள மரகதாம்பிகை தாயாருக்கு, 10 நாட்கள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இதில் உற்சவர் அம்மன் ராஜராஜேஸ்வரி, காமாட்சி, மீனாட்சி உள்ளிட்ட பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மேலும், ஒவ்வொரு நாளும், மாலை, 5:00 மணிக்கு அபிஷேகம், உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். மாலை, 6:00 மணிக்கு லலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனை நடைபெறும்.