உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் மலைக் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பழநியில் மலைக் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பழநி: காலாண்டுதேர்வு பள்ளிகள் விடுமுறையை முன்னிட்டு பழநிமலைக் கோயிலில் திரண்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மூன்று மணிநேரம் காத்திருந்தனர்.

பழநி மலைக்கோயில் ஞான தண்டாயுதபாணிசுவாமி தரிசனம் செய்ய சனி, ஞாயிறு தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பள்ளிகளில் காலாண்டுதேர்வு விடுமுறையை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில் 2 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். மலைக்கோயில் பொதுதரிசன வழியில் 3 மணிநேரம் காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுத பாணிசுவாமியை தரிசனம் செய்தனர். கிரிவீதியில் அனுமதி இல்லாத இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !